"இன்றைய முக்கியச் செய்திகள்".. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

1, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பகுதியில் 300 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும், திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில் 36 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

"இன்றைய முக்கியச் செய்திகள்".. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2, அமெரிக்காவில் ஒரே நாளில் 18,276 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,41,854 எனும் சூழலில், ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 255 பேர் இறந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் பலியானோரின் எண்ணிக்கை 2,475 ஆக உள்ளது. 

3, சமூக பரவலை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் விதமாகவும், சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நோய் பரவும் அச்சத்தையடுத்தும்,  நாடு முழுவதும் அனைத்து மாநில எல்லைகளையும் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

5, உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதில் இத்தாலியில்  மட்டும் கொரோனா உயிரிழப்பு 10,700 ஐ தாண்டியது. இதனால் உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

6, காவல்துறையை ஏமாற்றியதாக நினைக்கும் மக்கள் கொரோனாவை ஏமாற்ற முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 1070 என்ற எண் மூலமாக தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

7, கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரியில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. 

8, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆக்ரா குடும்பத்தினருடனும் பிரதமர் மோடி வானொலியில் உரையாடினார்.

9, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1071ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. இதில் 100 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

10, கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடையால் சிலர் தற்கொலை செய்ததையடுத்து முதல்வர் பினராயி விஜயன் இப்படி உத்தரவிட்டுள்ளார். 

11., கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் திமுக தரப்பில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

12, கொரோனா காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

13, உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆயிரத்தை தாண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7,37,577 பேர் என்றும்  குணமடைந்தோர் 1,56,280 பேர் என்றும் தெரிகிறது. 

NEWS, HEADLINES, TODAY