'ஆசையா வளக்குறேன்'...'அது கஷ்டப்படுறதை பாக்க முடியல'...'கரப்பான்பூச்சிக்கு பிரசவம்'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்கால்நடை மருத்துவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த வீடியோ ஒன்று, சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் கரப்பான் பூச்சி ஒன்றை தனது வீட்டில் ஆசையாக வளர்த்து வந்தார். சமீபத்தில் அது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இது அந்த நபருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது வளர்ப்பு கரப்பான் பூச்சியை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்றார். அங்கு கரப்பான்பூச்சியை சோதித்த மருத்துவர் அந்தப் பூச்சி கர்ப்பமாக இருப்பதையும் அதற்கு பிரசவம் நேரம் நெருங்கியுள்ளதையும் அறிந்துள்ளார். ஆனால் அதில் சிக்கல் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
இயற்கையாகப் பிரசவிப்பதில் இருக்கும் சிக்கல் காரணமாக கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கரப்பான் பூச்சிக்கு மூன்று விதமான மயக்க மருந்துகள் தரப்பட்டன. உள்ளே எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு மயக்க மருந்து, சாதாரண அனஸ்தீஷியா, மற்றும் வாயு அனஸ்தீஷியா ஆகியன அந்தக் கரப்பான்பூச்சிக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கரப்பான் பூச்சியின் உடலிலிருந்து முட்டை பை ஆப்பரேஷன் மூலம் எடுக்கப்பட்டது.
சிசேரியன் தொடர்பாக பேசிய மருத்துவர், ''கரப்பான் பூச்சியின் உரிமையாளர் தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால், கரப்பானுக்கு அது தொற்றுவியாதியை ஏற்படுத்தி அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்'' என தெரிவித்தார். தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் அர்சிமந்திரத்தா கரப்பான் என்னும் அரிய வகை கரப்பான் இனமான இந்தப் பூச்சி, தனது வாழ்நாளில் 8 செ.மீ நீளத்துக்கு வளரக்கூடிய தன்மை கொண்டது.
Russian vets successfully perform nano-surgery on cockroach that had pregnancy complications
— RT (@RT_com) December 27, 2019
MORE: https://t.co/LcWyowHeQY pic.twitter.com/zclHWEcf5Q