'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...

அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் பிங் லியூ (37) என்பவர் கொரோனா வைரஸ் குறித்த மிக முக்கியமான ஆய்வு ஒன்றில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வார இறுதியில் அவருடைய வீட்டில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் டாக்டர் பிங் லியூ அவருடைய தலை, கழுத்து மற்றும் உடலில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரை சுட்டுக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மர்ம நபர் ஒருவரும் அவருடைய காரில் இறந்து கிடந்துள்ளார். லியூவை கொலை செய்த பிறகு அவர் தன்னுடைய காருக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் உயிரிழந்த 2 பேரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்கலாம் எனவும், லியூ சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.