தமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எப்போது மதுவிற்பனை?.. வெளியான முழுவிவரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எந்த நேரத்தில் மதுவிற்பனை செய்யப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எப்போது மதுவிற்பனை?.. வெளியான முழுவிவரம்..!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதில் மதுக்கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் நாளை முதல் (07.05.2020) சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் எந்தெந்த வயதினருக்கு எந்தெந்த நேரத்தில் மதுவிற்பனை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.