'கொரோனா விஷயத்தில்’... ‘எங்களை தவறாக வழிநடத்துகிறது’... 'திரும்பவும் கொந்தளித்த ட்ரம்ப்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார நிறுவனம் தங்களை தவறாக நடத்துவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உலக சுகாதார அமைப்பு, சீனாவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. கொரோனா குறித்து அந்த அமைப்பு தவறான தகவல்களையே பரப்பி வருகிறது. நாங்கள் இதுவரை உலக சுகாதார அமைப்பிற்கு, மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக இருந்துள்ளோம்.
ஆனால், அவர்கள் எங்களை தவறாக வழிநடத்தினர். அதை நாங்கள் தற்போது உணர்ந்துள்ளோம். உலக சுகாதார அமைப்புக்கு, பல விஷயங்கள் தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும், ஒன்று அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்ததை மறைத்திருக்க வேண்டும்.
நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கு 400 முதல் 500 மில்லியன், டாலர்கள் நிதி வழங்குகிறோம். ஆனால், சீனா 38 மில்லியன் டாலர்கள் மட்டும் நிதி வழங்குகிறது. அப்படியிருக்கையில், அவர்கள் சீனாவுக்கே வேலை செய்கின்றனர். மேலும் சீனாதான் நோயை உலகெங்கிலும், பரப்பியது. இந்த நோய் தொற்று பரவும் வேளையில், விமானங்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல அனுமதித்தது சீனாவின் தவறு’ என்று குற்றஞ்சாட்டினார்.