அதனால் என்ன?... தொடர்ந்து 'அதிகரிக்கும்' உயிரிழப்பால் 'நிலைகுலைந்துள்ள' மக்கள்... 'அதிரவைக்கும்' அதிபர் பதிலால் 'கொந்தளிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலில் தொடர்ந்து அதிகரித்துவரும் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு அதிபர் அளித்துள்ள பதில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 78,100 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5,466 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 6276 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 449 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டிற்கு 5 சவப்பெட்டிகள் வரும் நிலையில், இறப்புச் சான்றிதழ் வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ரியோ டி ஜெனிரியோவில் புதிய இடுகாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இடுகாடுகளில் இடமின்றி ஒன்றின் மேல் ஒன்றாக சவப்பெட்டிகளை வைத்து புதைத்த துயரமும் நடந்துள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பின்னரே அப்படி செய்வதை புதைப்பவர்கள் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு அந்நாட்டு அதிபர், "அதனால் என்ன? ஐ அம் சாரி. என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது" என பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேசிலிலிருந்து விமானம் அல்லது படகு மூலமே செல்லக்கூடிய மானவ்சில் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் உடல்கள் வைக்கப்படுவது அதிகரித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.