'கொரோனா தடுப்பூசி ரெடி...' '200 பேருக்கு போட்டு டெஸ்ட் பண்றோம்...' ஜெர்மன் பயோடெக் நிறுவனம் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி முதற்கட்டமாக 200 மனித உடலில் பரிசோதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

'கொரோனா தடுப்பூசி ரெடி...' '200 பேருக்கு போட்டு டெஸ்ட் பண்றோம்...' ஜெர்மன் பயோடெக் நிறுவனம் தகவல்...!

உலக அளவில் பரவி வரும் கோவிட் 19 என்னும் கொரோனா தொற்று பல நாடுகள் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். இதில் அனைவரையும் முந்தும் வகையில் ஜெர்மன் பயோடெக் நிறுவனம் பலகட்ட முயற்சிக்கு பிறகு மனிதர்களிடம் பரிசோதிக்க அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது.

ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமான பயோ என் டெக் (BioNTech) என்னும் ஆய்வகம் பலகட்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றிகரமாக கொரோனோவிற்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

BNT 162 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பயோ என் டெக்கும், உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசரும் (Pfizer) இணைந்து உருவாக்கியுள்ளன. வெக்டர் மற்றும் ஆர்என்ஏ அடிப்படையில் தலா 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த BNT 162 தடுப்பூசியை முதற்கட்டமாக 18க்கும் 55 வயதிற்கு உட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள 200 பேரிடம் சோதிக்க ஜெர்மன் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜெர்மன் அரசும் அனுமதி அளித்துள்ளது.

அதையடுத்து BNT 162 தடுப்பூசியை தொற்று வாய்ப்பு அதிகம் உள்ள நபர்களிடம் இரண்டாம் கட்டமாக சோதனை நடக்கும் என ஜெர்மன் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை கொண்டு அமெரிக்காவிலும் கிளினிகல் சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது