ஊர்ல சரியா ‘சிக்னல்’ கெடைக்கல.. அதான் தினமும் மரத்தில் ஏறி ‘பாடம்’ நடத்துறேன்.. ‘அசத்திட்டீங்க சார்’..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்து வரும் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளும் முடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஆன்லைனில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை அனுப்பி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்வங்கம் மாநிலம் பங்கூராவை சேர்ந்த ஆசிரியர் சுப்ரதோ படி என்பவர் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். ஆனால் தனது கிராமத்தில் சிக்னல் சரியாக கிடைக்காததால் மரத்தின் மீது ஏறி தினமும் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். அங்கு சீரான இணையதள சேவை கிடைத்ததால், மரத்தில் இருந்தபடியே தினமும் காலை 9:30 மணிமுதல் மாலை 6 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.
West Bengal:Subrato Pati,a teacher from a village in Bankura has set up his workspace on a tree,so that he can take online classes without network disruptions."We don't get network signals everywhere in our village.I take different classes from 9:30 am to 6:00 pm",he said.(22.04) pic.twitter.com/5EdxEYlaMc
— ANI (@ANI) April 23, 2020