'அந்த பிஞ்சுகளுக்கு எதுவும் ஆக கூடாது'...'நெக்ஸ்ட் லெவலுக்கு போன மருத்துவமனை'...குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புதிதாக இந்த உலகத்திற்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காக, குழந்தைகளுக்கென பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ செய்துள்ளது.

'அந்த பிஞ்சுகளுக்கு எதுவும் ஆக கூடாது'...'நெக்ஸ்ட் லெவலுக்கு போன மருத்துவமனை'...குவியும் பாராட்டு!

உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பலரும் தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு விதமான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

அந்த வகையில் தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகர்ன் மாகாணத்தில் அமைந்திருக்கும் பவோலோ மருத்துவமனையில் (Paolo Hospital), புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கென்று பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கென பிரத்யேக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்களை அந்த குழந்தைகளுக்கு  அணிவிப்பதன் மூலம், கொரோனா தொற்றிலிருந்து பிஞ்சு குழந்தைகளை பாதுகாக்க முடியும் என, அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவோலோ மருத்துவமனை, ''எங்கள் மருத்துவமனையில் பிறந்திருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு. சோ கியூட்'' என சில புகைப்படங்களை மருத்துவமனை பகிர்ந்துள்ளது.

இதற்கிடையே மருத்துவமனையின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகின்றன. பலரும் மருத்துவமனையை பாராட்டி வருகிறார்கள். இதனிடையே கொரோனா பரவாமல் தடுக்க, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை தாய்லாந்து அரசு அமல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.