20 பேரை 'சுட்டுக்கொலை' செய்துவிட்டு... பேஸ்புக்கில் போலீசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்திய நபர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

20 பேரை கொலை செய்துவிட்டு பேஸ்புக்கில் போலீசுடன், ராணுவ வீரர் பேச்சுவார்த்தை நடத்திய தகவல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

20 பேரை 'சுட்டுக்கொலை' செய்துவிட்டு... பேஸ்புக்கில் போலீசுடன் 'பேச்சுவார்த்தை' நடத்திய நபர்!

இன்று தாய்லாந்து நாட்டின் வணிக வளாகத்திற்குள் நுழைந்த அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதனை தன்னுடைய பேஸ்புக்கிலும் அவர் லைவ்வாக ஒளிபரப்பி இருக்கிறார். இந்த தாக்குதலில் 17 பேர் வரை உயிரிழந்ததாகவும், மேலும் பலர் குண்டு துளைத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த ராணுவ வீரரின் பெயர் ஜாக்ராபஹாத் தொம்மா(32). இவர் இன்று காலை தாய்லாந்து ராணுவ முகாம் ஒன்றிலிருந்து துப்பாக்கிகள் சிலவற்றைத் திருடி வந்துள்ளார். துப்பாக்கியைத் திருடிய தொம்மா, அதை வைத்து தனது மேல் அதிகாரி ஒருவரை இன்று மதியம் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து மூதாட்டி ஒருவரையும், சிப்பாய் ஒருவரையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 20 பேரை கொலை செய்ததை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது.

அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில் தொம்மா பேஸ்புக்கில் போலீசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதையடுத்து  அவரது பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிறுவனம் முடக்கி இருக்கிறது. தாக்குதலுக்கு பின் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் , 'மிகவும் ஆனந்தமாக உள்ளது', 'மரணத்தை யாராலும் வெல்ல முடியாது, 'நான் சரண்டர் ஆக வேண்டுமா? என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.