'ஒவ்வொரு' தடவையும்... அவர் ரன் 'அடிச்சாலே' இப்டித்தான் ஆகுது... புள்ளிவிவரங்களுடன் 'களத்தில்' குதித்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சைனி ஆகியோர் கடுமையாக போராடியும் இந்த தோல்வியை தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக ஜடேஜா(55) கடைசிவரை களத்தில் நின்று வெற்றிக்காக போராடினார்.

ஆனால் இந்திய அணியின் தோல்வியை தள்ளிப்போட முடிந்ததே தவிர தவிர்க்க முடியவில்லை. இதனால் டி20 தொடரை கைப்பற்றி விட்டு, இப்படி ஒருநாள் தொடரை கோட்டை விட்டு விட்டீர்களே? என இந்திய ரசிகர்கள் ஆதங்கம் தாங்காமல் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டியில் ஜடேஜா 50 ரன்களுக்கு மேல் அடித்தால் இந்திய அணி தோற்று விடுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜடேஜா 50 ரன்களுக்கு மேல் எடுத்த 12 போட்டிகளில் 10-ல் இந்திய அணி தோற்றுள்ளது. இதில் உலகக்கோப்பை, இன்றைய ஒருநாள் போட்டியும் அடக்கம். இதே நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் மட்டும் மேட்ச் டிராவாகி இருக்கிறது. அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.
12 50s by Jadeja in odi
60* vs SL (Ind lost)
57 vs Aus (Ind Lost)
61* vs Zim (Ind lost)
51 vs Zim (Ind Lost)
78 vs Eng (Ind lost)
61* vs Eng (Ind won)
66* vs NZ (Match tied)
62* vs NZ (Ind Lost)
52* vs Pak (Ind lost)
87 vs Eng (Ind lost)
77 vs NZ (Ind Lost)
55 vs NZ (Ind lost)*
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) February 8, 2020
தற்போது இந்த புள்ளிவிவரங்களை ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். டி20 தொடரின்போது மணீஷ் பாண்டே அணியில் இருந்தால் இந்தியா அந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என புள்ளி விவரங்களை ரசிகர்கள் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.