இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > உலகம்1. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
2. போகிப் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது. சென்னையின் மத்திய பகுதிகளில் 722 மைக்ரோ கிராம் மாசு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
3. இந்திய பிரதமர் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. சென்னை நெற்குன்றம் பகுதியில் வருமான வரித்துறையினர் எனக் கூறி பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
5. இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான ஆண் இறந்தால் மட்டுமே தாய்க்கு வாரிசுரிமை உள்ளது, திருமணமான பெண் இறந்தால் அவருடைய கணவர், குழந்தைகள் மட்டுமே வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
6. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
7. சப்பக் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு ஆசிட் வீச்சால் பாதிக்கட்ட பெண்களுக்கு மாதம் ரூ 5000 - ரூ 6000 பென்சன் வழங்கும் திட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
8. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வாடிவாசலில் 2,100 காளைகளை களமிறக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
9. டெல்லியின் லாரன்ஸ் சாலை பகுதியில் இயங்கி வரும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
10. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11. ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12. இன்றைய போட்டியில் ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே இந்தப் பட்டியலில் உள்ள சச்சின், தோனி, கோலி, ரோஹித் ஆகியோருடன் தவானும் இணைந்துள்ளார்.
13. திருவள்ளூர் ஆரம்பாக்கம் பகுதியில் ரயில் மோதி ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.