இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656லிருந்து  18,601ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 559லிருந்து 590ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,842லிருந்து 3,252ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. 

3. உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 1.71 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 6.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

4. கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்யக் கொண்டு செல்லும்போது தடுத்து தாக்குதல் நடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

5. தமிழகத்தில்  சமூகப் பரவல் இல்லை என்பது ரேபிட் டெஸ்ட் மூலம் தெரியவந்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

6. மருத்துவர்கள் மற்றும் பிற களப் பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழக அரசு அவர்களின் பக்கம் முழுமையாக நிற்கும் என முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

7. அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 1,939 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு  எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,92,913 ஆக உள்ளது.

8. தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தக் கோரிக் கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

9. ஊரடங்கு முடிந்த பிறகு அரசுப் பேருந்தில் ஏறும் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

10. அமெரிக்காவில் வரலாறு காணாத வீழ்ச்சியாக பூஜ்ஜியம் டாலருக்கு கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை பின் மீட்சியடைந்து 20 டாலராக உள்ளது.

11. கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை விலங்குகளிடமிருந்தான் பரவியுள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

12. அடுத்த 2 நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

13. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை இருதய அறுவை சிகிச்சைக்குப் பின் மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தென் கொரியா மறுத்துள்ளது.