இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு மாதத்திற்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 18,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3252 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 590 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 1520 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு யாருக்கெல்லாம் சளி, காய்ச்சல் இருந்ததோ அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டைன்மெண்ட் பகுதிகள் மட்டுமின்றி மற்ற இடங்களில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தகவல் தெரிவித்துள்ளார்.