இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1. சவுதி அரேபியாவில் 17 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

2. சென்னையில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமலேயே பாதிப்பு என மாநகராட்சி ஆணையர் தெரிவித்து இருக்கிறார்.

3. கோயம்பேடு சந்தையில் மொத்தம் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

4. வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடைய வேண்டுமெனச் சீனா விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

5. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்கான ஆன்டி வைரல் மருந்தை கிளென்மார்க் பார்மாசூடிக்கல்ஸ்  (Glenmark Pharmaceuticals) நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அதை மனிதர்களிடம் அளித்து பரிசோதிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

6. சென்னையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரோபோ தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

7. கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

8. தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

9. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

10. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,610 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,373 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதே நேரம் 1075 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

11. சென்னையில் நேர கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இயங்கிய 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும், சீல் வைக்கப்பட்ட 350 கடைகளை திறக்க 3 மாதங்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து இருக்கிறார்.