வீட்டில் 'பிணமாக' கிடந்த 5 மாத கர்ப்பிணி... ஆற்றில் 'மிதந்த' கணவர் சடலம்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவிலுள்ள ஜெர்சி நகரில் வசித்து வந்தவர் கரிமா கோத்தாரி. இவரது கணவர் மன்மோகன் மால். இந்தியாவை சேர்ந்த இந்த தம்பதியினர் ஜெர்சி சிட்டியில் 'நுக்கட்' என்ற இந்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.

வீட்டில் 'பிணமாக' கிடந்த 5 மாத கர்ப்பிணி... ஆற்றில் 'மிதந்த' கணவர் சடலம்... என்ன காரணம்?

இந்நிலையில் கரிமா கோத்தாரி கடந்த 26 ஆம் தேதியன்று தனது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்சி நகர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கர்ப்பிணியாக இருந்ததும், உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மேலும் அதிர்ச்சியாக, கரிமாவின் கணவர் மன்மோகன் மாலும் ஹட்சன் ஆற்றில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. மன்மோகனின் உடலை கைப்பற்றிய போலீசார், அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல் குறித்த அறிக்கை இன்னும் வெளிவரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கணவர் மற்றும் கர்ப்பிணி மனைவி ஆகியோரின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய தம்பதிகள் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.