'அடேங்கப்பா.. இந்த வேலைக்கு 26.5 லட்சம் ரூபாய் சம்பளமா?' எங்கன்னு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம், சோஷியல் மீடியா மேனேஜராகப் பணியாற்றுவதற்கான இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'அடேங்கப்பா.. இந்த வேலைக்கு 26.5 லட்சம் ரூபாய் சம்பளமா?' எங்கன்னு தெரியுமா?

கடந்த மார்ச் மாதம் தான் மகாராணி இரண்டாம் எலிசபெத் முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார். ராணி எலிசபெத் தற்போதைய சமூக வலைதளப் பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாதவர். இதனால் அவருக்கு உதவுவதற்காகவே சோஷியல் மீடியா மேனேஜர் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டன் அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு சோஷியல் மீடியா மேனேஜராகப் பணியாற்றுவதற்கான இடம் காலியாக இருப்பதாகவும், இதற்கு தகுதியான நபர் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா மானேஜர் பதவிக்கு தகுதியாக, ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வலைதளப் பக்கங்களை கையாள்வதில் திறமையானவர்களாவும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான, துடிப்பாக செயலாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சுமார் 26.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

பணியில் சேர்பவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். பணியிடம் பக்கிங்ஹாம் அரண்மனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 37.5 மணிநேரம் மட்டுமே பணிபுரிந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. மே மாதம் 22-ம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கம்யூனிகேஷன் ஆபிசர்ஸ் என்ற அறிவிப்பின் கீழ் வேலை சம்பந்தமான பணிகள் கூறப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவல்கள் பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

THEROYALFAMILY, QUEENELIZABETH, UK, SOCIALMEDIA