'மருத்துவமனையில் மகள்.. 2 மணி நேரம்தான் தூக்கம்'.. ஆனாலும் செஞ்சுரி.. நெகிழவைத்த வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானுடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 341 என்கிற இலக்கினை சேஸ் செய்த இங்கிலாந்து அணி 3-0 என்கிற விகிதத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதற்கு முக்கியமான காரணம் ஜேஸன் ராய். காலை 8.30 மணிக்கு மைதானக்கு வந்து சிறிது நேரமே பயிற்சி எடுத்துவிட்டு களத்தில் இறங்கினார். அதன் பிறகு 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட, 89 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு சதமடித்து, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ஒரு கிரிக்கெட் வீரர் சதமடிப்பது அபூர்வம்தான். ஆனால் அதை சிலர் செய்கிறார்களே? அதில் என்ன ஆச்சர்யம்? எனினும், முதல்நாள் இரவு 2 மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு, தனது குழந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக ஆட்டத்துக்கு முன்பு 7 மணிநேரமாக மருத்துவமனையில் இருந்துவிட்டு காலையில் வந்து ஒரு சதம் அடிக்கும் வீரரை ஆச்சரியமாக பார்க்காமல் என்ன செய்ய?
ஆம், இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராயின் இந்த சதமும், அதற்கு பின்னால் இருக்கும் அவருடைய குடும்ப சூழலும், நாட்டுக்காக தூங்காமல் வந்து, அர்ப்பணிப்புடன் கிரிக்கெட் மேட்சை ஆடி, அதிலும் சலுகை எடுத்துக்கொள்ளாமல், சதம் அடித்து ரன்களை வாரி வழங்கிய ஜேஸன் ராய் பலராலும் பாராட்டுப்பட்டு வருகிறார்.