'கட்டுக்குள்' வராத கொரோனா... 'விட்டுக் கொடுக்காத' சீனர்கள்... '2-3 மணி' நேரம் மட்டுமே உறங்கும் 'மருத்துவர்கள்'... சீனா வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' புகைப்படங்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போராடி வரும் சீன மக்களை பாதுகாக்க அங்குள்ள மருத்துவர்கள் இரவு-பகலாக போராடி வரும் புகைப்படங்கள் கண்கலங்க வைப்பதாக உள்ளது.

'கட்டுக்குள்' வராத கொரோனா... 'விட்டுக் கொடுக்காத' சீனர்கள்... '2-3 மணி' நேரம் மட்டுமே உறங்கும் 'மருத்துவர்கள்'... சீனா வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' புகைப்படங்கள்...

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காக்க சீன மருத்துவர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர சீன மருத்தவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதற்காக சீனாவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இரவு , பகலாக மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை காக்கும் பணியல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் கிடைத்த நேரத்தில், கிடைத்த இடத்தில்  தூங்கும் புகைப்படங்கள் இணையத்தில் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

தாங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளை கூட கழற்றாமல் அப்படியே உறங்கி எழுந்து தங்கள் வேலைகளை செய்கின்றனர். மருத்துவமனை சுவரில் சாய்ந்த படியும், நாற்காலிகளில் அமர்ந்த படியும் மருத்துவ ஊழியர்கள் தூங்கி வரும் காட்சி புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

CORONA, CHINA, DOCTORS, PHOTOS, WUHAN