நிர்பயா வழக்கு: திஹாரை வந்தடைந்த 'பவான்' ஜல்லட்... 'திட்டமிட்டபடி' பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும், பிப்ரவரி 1-ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிர்பயா வழக்கு: திஹாரை வந்தடைந்த 'பவான்' ஜல்லட்... 'திட்டமிட்டபடி' பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேரும் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம்  உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிர்பயா குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதற்கிடையில் நிர்பயா தரப்பு வழக்கறிஞர் பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ள தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனால் திட்டமிட்டபடி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி குற்றவாளிகள் நால்வரும் தூக்கில் போடப்படுவார்கள் என திஹார் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' இன்று (ஜனவரி 31) ஒத்திகை பார்க்கப்பட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திட்டமிட்டபடி நால்வரும் தூக்கில் போடப்படுவார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடவிருக்கும் பவான் ஜல்லட் மீரட்டில் இருந்து திஹார் சிறையை நேற்றிரவு சென்றடைந்து இருக்கிறார். இதனால் இந்தமுறை குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் எந்தவொரு தாமதமும் நிகழாது என நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.