'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பலநாட்களாக காத்திருந்து பெற்ற, தங்களது முதல் தேவதையை, இளம் தம்பதி பறிகொடுத்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. 

'தேவதைனு தெரிஞ்சதும் துள்ளிக் குதிச்சேன்'... 'இப்போ ஒட்டுமொத்த சந்தோசமும் பறிபோச்சு'... 'சோகத்திலும் இளம்தம்பதி எடுத்த முடிவு'!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தில் வசித்துவருபவர்கள், இளம்தம்பதியான மைக்கேல் ஆப்ரம்ஸ் மற்றும் ஜேடன் ரோஸ். இந்த தம்பதியின் 5 மாத குழந்தைதான் எமலி. 10 மாதம் பல்வேறு கனவுகளுடன் குழந்தையின் வரவுக்காக காத்திருந்தனர், இந்த தம்பதியினர். அர்களின் கனவை நனவாக்க 5 மாதங்களுக்கு முன்பு, அந்த அழகிய தேவதை ஒருநாள் பிறந்தாள். முதல் குழந்தை, அதுவும் பெண் என்பதால், உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார் மைக்கேல். மகளின் ஒவ்வோர் அசைவுகளையும், இருவரும் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்தனர்.

எமலியின் மழலை மொழியை கேட்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தைக்கு, திடீரென உடல்நலம் குன்றியது. சிறிது வாந்தி எடுக்கத் தொடங்கினால், அதன்பின் சரியானது. ஒருவாரம் கழித்து மீண்டும் வாந்தி எடுக்கத் தொடங்கியதால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிய அளவிலான உடல்நலக் குறைவு என்றே தம்பதியினர் நினைத்திருந்தனர். ஆனால், மருத்துவர்கள் சொன்ன தகவலோ, இருவருக்கும் பேரிடியாய் அமைந்தது.

குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர். யோசிப்பதற்குக்கூட நேரமில்லை, சிரித்து விளையாடிக்கொண்டே இருந்த குழந்தை படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். இதையடுத்து குழந்தையின் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுக்கு, நண்பர்களின் உதவியை நாடிய தம்பதி, ஆவலோடு காத்திருந்த குழந்தையின் அறுவை சிகிச்சையும் முடிந்தது. ஆனால், குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது அவர்களின் ஒட்டுமொத்த கனவும் சிதைந்தது.

கதறித்துடித்த இளம் பெற்றோர், அந்த தருணத்திலும், ஒரு முடிவை எடுத்தனர். ‘எமலி எங்கள் முதல் குழந்தை. அவளுடன் இருக்கும் வாய்ப்பை 5 மாதங்கள் மட்டுமே பெற்றோம். எங்கள் முதல் குழந்தையின் வாழ்க்கையை மதிப்பதால், அவளது கிட்னி மற்றும் இதயத்தை தானமாக வழங்குகிறோம். இதனை 2 பேர் பெறுவதற்காக காத்திருக்கிறார்கள். அவள் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றவுள்ளாள். எங்கள் மகளின் உடல் உறுப்புகளை அவர்கள் வைத்திருப்பதால், ஒரு நாள், அவர்களை போய் சந்திப்போம். உங்கள் குழந்தையை கட்டிப்பிடியுங்கள்.

முத்தம் கொடுங்கள் அவர்களுக்காக நேரம் செலவிடுங்கள்’ என கனத்த இதயத்தோடு, தனது மனைவியை தேற்ற முடியாமல் மைக்கேல் கூறியுள்ளார். எமலி இருந்த மருத்துவமனை வார்டில் அவள் பயன்படுத்திய பொம்மைகள், அவளுக்குப் பிடித்த ஆடைகள் என அனைத்தும் வைக்கப்பட்டது. கண்ணீருடன் காத்திருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும், மருத்துவமனை முழுவதும் நிறைந்து அவளை இறுதியாக வழியனுப்பி வைத்தனர்.

https://www.facebook.com/NathalieGrandaABC30/videos/380372982656138/

AMERICA, BABY, PARENTS, BRAINDEAD, DONATE