'130 கி.மீ ஸ்பீடு'...'பயபுள்ள எப்படி கேட்ச் புடிச்சு இருக்கு'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ரோலர் கோஸ்டில் மணிக்கு 130 கி.மீ பயணிக்கும் போது இளைஞர் ஒருவர், வேறு ஒரு நபரின் மொபைலை பிடித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சில நேரங்களில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என நினைக்க தோன்றும் அளவிற்கு சில விஷயங்கள் நடப்பதுண்டு. அது போன்று நடந்த நிகழ்வு ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சாமுவேல் கெம்ஃப். இவர் ஃபிஸ்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவர் குடும்பத்துடன் போர்ட் அவென்டுரா தீம் பார்க்குக்கு சென்றுள்ளார். அங்கு மிகவேகமாக செல்லும் ரோலர் கோஸ்டில் சென்றுள்ளார். அந்த ரோலர் கோஸ்டர் 130 கி.மீ வேகத்தில் சென்றுள்ளது. அந்த நேரத்தில் அவருக்கு முந்தைய இருக்கையில் இருந்தவரின் மொபைல் போன் தவறி விழுந்துள்ளது. இதனை சட்டென கவனித்த கெம்ஃப் அதனை கேட்ச் பிடித்தார்.
இதையடுத்து கெம்ஃப் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. கெம்ஃப் நடத்தி வரும் யூட்யூப் சேனலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது வெறும், 600 சப்ஸ்கிரைபர்கள் மட்டும் கொண்ட அந்த யூட்யூப் சேனலில் இந்த வீடியோவை 51 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.