‘இந்தா பிடி’.. ‘பெண் அதிகாரியின் துண்டுச் சீட்டு’... ‘வாங்கி பார்த்த இளைஞருக்கு’... ‘காத்திருந்த பேரதிர்ச்சி'!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூயார்க் விமானநிலையத்தில் இளைஞர் ஒருவருக்கு, எழுதிக்கொடுத்த துண்டு சீட்டு காரணமாக பெண் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கை சேர்ந்தவர் நீல் ஸ்ட்ராஸ்நர். இவர் வெளியூர் செல்வதற்காக, ரோசெஸ்ட்டர் சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தார். பின்னர், போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்பு சோதனைக்கு சென்றார். அப்போது பாதுகாப்புக்கு இருந்த பெண் அதிகாரி, அவரை மெட்டல் டிடெக்டர் வழியாக வரச் சொன்னார். நீல் தூரத்தில் வரும்போதே அவரைக் கவனித்த அந்த அதிகாரி, ஒரு குறிப்பு ஒன்றை பேப்பரில் எழுதி, கிழித்துக் கையில் வைத்துக்கொண்டார்.
நீல், வந்ததும், அவர் கையில் அந்த பேப்பரை கொடுத்தார். பிறகு, ‘இந்த குறிப்பை வாசிக்க போகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டுப் பயங்கரமாகச் சிரித்தார். உடனடியாக அதை வாசித்துப் பார்த்த நீலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில், யூ அக்லி (YOU AGLY) என்று எழுதப்பட்டிருந்தது. இதுபற்றி உயரதிகாரிகளிடம் புகார் செய்தார் நீல்.
இதுபோன்ற நடத்தையை ஏற்கமுடியாது என்று அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கியது நிர்வாகம். அவர் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடந்தது. இதுதொடர்பான வீடியோ பதிவை, இப்போது பெற்றுள்ள நீல், சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
UPDATE: The airport security employee has been fired, according to TSA. Here's the video of the employee passing the mean note, laughing about it, and reaching for more paper to begin writing again. #ROC pic.twitter.com/wXLcD8aLwz
— News 8 - WROC-TV (@News_8) August 15, 2019