2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > உலகம்கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து 2020ம் ஆண்டிற்கான தலைசிறந்த நாடுகளின் பட்டியலை, அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கையும், வார்டன் பள்ளி பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் பாவ் என்ற உலகளாவிய ஆலோசனை மையமும் சேர்ந்து வெளியிட்டுள்ளன.
2020ம் ஆண்டிற்கான அதன் அறிக்கையில் இயற்கையான சூழலில் வாழக்கூடிய நாடுகள் பட்டியலில் சுவீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
மிகவும் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
கல்வியில் சிறந்த நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளும், தொழில் தொடங்க ஏற்ற நாடுகளாக தாய்லாந்து, மலேசியா, சீனா ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன.
பெண்கள் பயமின்றி வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில், டென்மார்க், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும்,, சிறப்பான வாழ்க்கைத்தரம் உடைய நாடுகளாக கனடா, டெமார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தையும் பிடிக்கவில்லை. கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களில் இந்தியா இன்றும் பின்தங்கியே உள்ளது