”ரூ.132 கோடி வரி ஏய்ப்பா?”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி!”.. “உறைய வைத்த நோட்டீஸ்!”
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேச மாநிலம் மோகனா என்கிற இடத்தைச் சேர்ந்தவர் ரவி குப்தா. 29 வயதான ஏழை விவசாயியான இவர் மீது, வருமான வரித்துறை ரூ.132 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை ரவிகுப்தா அனுப்பிய கடிதத்தில், ‘ரவிகுப்தா குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்துவதாகவும், அவருக்கு 2011 செப்டம்பர் முதல் 2012 பிப்ரவரி வரை பலகோடி ரூபாய் நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதில் இதுவரை ரூ.132 கோடிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2019 மார்ச் மாதம் ஒருமுறையும், 2019 ஜூலை மாதம் ஒரு முறையும் நோட்டீஸ் வந்தபோது அதை தெரியாமல் அனுப்பியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட ரவிகுப்தா, இம்முறை இந்த வரியைக் கட்டவில்லை என்றால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்கிற வருமான வரித்துறையின் நோட்டீஸைப் பார்த்ததும் அதிர்ந்தே போய்விட்டார்.
அதனால் நடந்ததையெல்லாம் கூறி, தன் பெயரில் யாரோ இப்படி நிறுவனம் நடத்தி மோசடி செய்திருக்க வேண்டும் என்றும், உண்மையில் வரி ஏய்ப்பு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள காலக்கட்டத்தில், தான் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் இந்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விளக்கம் அளித்து, வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.