'கைதட்டணும்..வாய்விட்டு சிரிக்கணும்..முக்கியமா'.. இறந்தவரின் விநோத இறுதி ஆசை! வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அயர்லாந்தில் ராணுவ வீரர் ப்ராட்லீ சமீபத்தில் மரணத்தைத் தழுவினார். இவரது இறுதிச் சடங்கு நடந்து முடிந்த முறைதான் உலக மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

'கைதட்டணும்..வாய்விட்டு சிரிக்கணும்..முக்கியமா'.. இறந்தவரின் விநோத இறுதி ஆசை! வீடியோ!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பயப்படுவதும், தொடர்ந்து சந்தேகப்படுவதும் அல்லது குழம்புவதும்  தம்முடைய இறப்பைப் பற்றிதான். ஞானம் என்ற ஒன்றை தேடிச் செல்பவர்கள் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றாலும், மரணம் குறித்த நினைப்பாவது அவர்களுக்குள்ளும் இருக்கும்.

ஆனால், அயர்லாந்து ராணுவ வீரர் தன்னுடைய இறப்புக்கு பின்னான கடைசி ஆசையை சொல்லிவிட்டு இறந்திருக்கிறார். அதன்படி, தனது இறுதிச் சடங்கின்போது, அனைவரும் வாய் விட்டு சிரிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார்.  இதேபோல்,  ‘நான் எங்கு இருக்கிறேன்.. ஒரே இருட்டாக இருக்கிறது. யாராவது என்னை வெளியே கொண்டு செல்லுங்கள்’ என்று அவரே பேசிய ஆடியோவை, அவரது சவப்பெட்டியின் மேல் ஒலிக்கவிடச் சொல்லியும் கோரியுள்ளார்.

அவர் கேட்டுக்கொண்டபடியே, அவருடைய உறவினர்கள், கைதட்டி, வாய்விட்டு சிரித்தபடி அவரை அடக்கம் செய்தும், அந்த ஆடியோவை ஒலிக்கச் செய்தும் அவரது இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

IRISH, ARMY MAN