'பானி பூரி வித்து'... 'பசியில் உறங்கி தவித்த இளம் வீரர்'... 'உலக சாதனை படைத்து அசத்தல்'... நெகிழ்ச்சியான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விஜய் ஹசாரேப் போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

'பானி பூரி வித்து'... 'பசியில் உறங்கி தவித்த இளம் வீரர்'... 'உலக சாதனை படைத்து அசத்தல்'... நெகிழ்ச்சியான சம்பவம்!

உள்ளூர் அணிகள் பங்கேற்கும், விஜய் ஹசாரே 50 ஓவர் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. பெங்களூருவில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடித்து விளாசிய, இவருக்கு தற்போது, 17 வயதுதான் (17 வருடம் 292 நாட்களே) ஆகிறது. இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டியில், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாதோஹியில் பிறந்த இவர், ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்துள்ளார். கிரிகெட் மீதான அதீத காதலால், மும்பை வந்த ஜெய்ஸ்வால், இருக்க இடமின்றி இரவு நேரங்களில், சாலையின் நடைபாதையில் உறங்கியுள்ளார். பின்னர், அங்கு தங்குவதற்கும் இவருக்கு மறுக்கப்பட உறவினர் ஒருவரின் உதவியால்,  முஸ்லிம் யுனைடெட் கிளப் மைதான ஊழியர்களுடன், ஆசாத் மைதானத்தில் டெண்ட்களில் வாழ்க்கையைக் கழித்துள்ளார்.

கிரிக்கெட் பழகிக்கொண்டே, வாழ்வாதாரத்துக்காக பானிபூரி விற்றுள்ளார். சக பயிற்சி வீரர்கள் தான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து உணவருந்துவதை பொருட்படுத்தாமல் வேலைப் பார்த்து வந்துள்ளார். பின்னர் உள்ளூர் பயிற்சியாளர் ஜ்வாலா சிங், இவர்மீது நம்பிக்கை வைத்து பல்வேறு விதங்களில் உதவியுள்ளார். இவரது வாழ்க்கை அனுபவம், சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறது.

YASHASVIJAISWAL, TEENAGER, MUMBAI, WORLD, RECORD, PANIPOORI