"மளமளவென புகுந்த நீர்"... "மிதக்கும் கார்கள்!"... "மகிழ்ச்சியில் அரசு"...
முகப்பு > செய்திகள் > உலகம்வறண்ட பூமியான துபாயில் கடந்த 3 நாட்களில் பெய்த கன மழையால், அந்நாட்டின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஒரு வறண்ட நிலப்பரப்பாகும். சார்ஜா உள்ளிட்ட துபாயின் பிரதான நகரங்கள், சில நாட்களாக பனியால் பாதிக்கப்பட்டுவந்தன. ஆனால், தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வரலாற்றில் இல்லாத இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையில் இருக்கும் வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இருப்பினும், வரலாறு காணாத கன மழை, வறண்ட நிலத்தில் வாழும் அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மழையால், விவசாயம் செழிக்கும் என அந்நாட்டு அமைச்சர் தானி அஹம்மது அல்சயாதி தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் மேகக்கூட்டங்களின் கலவை காரணாமாக, குறுகிய காலத்தில் பலத்த மழை பெய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.