“அவனுக்கு சரி ஆகவே இல்ல!”.. “திருச்சி லாட்ஜில் தங்கிய குடும்பம்!”.. “உறவினருக்கு சென்ற அதிர்ச்சி மெசேஜ்!”
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி கிராமத்தைச் சேர்ந்த 47 வயது செல்வராஜ் என்பவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இவரது மனைவி 43 வயதான செல்லம் என்பவர். இவர்களது மகன்கள் 20 வயதான நிகில் மற்றும் 14 வயதான முகில். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்துள்ளனர். மேலும் திருச்சி மேலரண் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சாமி கும்பிட கோயிலுக்கு வந்ததாகக் கூறி அறையெடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்றிரவு 8.30 மணி அளவில், செல்வராஜ் தனது உறவினர் குரு கணேஷ்க்கு ஒரு குறுஞ்செய்தி போனில் அனுப்பியுள்ளார். அதில் தான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
உடனே பதறிப்போய், இரவு 10.30 மணிக்கு அங்கு வந்த குரு கணேஷ், செல்வராஜின் அறைக்கதவை திறந்து பார்த்தபோது, மொத்த குடும்பமும் கொல்லப்பட்டிருந்தனர். செல்வராஜ் மட்டும் கழுத்தறுத்துக்கொண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி செல்வராஜ் எழுதிவைத்திருந்த கடிதத்தில், மூளை வளர்ச்சி இல்லாத நிகிலுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் சரிசெய்ய முடியவில்லை என்பதாலும், மருத்துவ செலவுக்காக வாங்கிய கடன்கள் அதிகமாக இருப்பதாலும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, மனைவி மற்றும் மகன்களை கொன்றதற்காக செல்வராஜ் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.