‘2 பேருக்கு மேல ஒன்று கூடக் கூடாது!’.. ‘பிரதமருக்கே வொர்க் ஃப்ரம் ஹோம்!’.. ‘அட்டூழியம் செய்யும் கொரோனா!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜெர்மனியில் இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்று கூடக் கூடாது என்கிற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘2 பேருக்கு மேல ஒன்று கூடக் கூடாது!’.. ‘பிரதமருக்கே வொர்க் ஃப்ரம் ஹோம்!’.. ‘அட்டூழியம் செய்யும் கொரோனா!’

உலகம் முழுவதும் கொரானா பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு 192 நாடுகளில் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 75 பேரை தாக்கியுள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் நேற்று ஒருநாளில் 651 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்காவில் 116 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் ஆயிரத்து 756 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 636 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது நிலையில் ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உண்ணும் நடைமுறை தடை செய்யப்படுவதாகவும், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும் பொது இடங்களில் இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்கு, அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் ஆலோசனை நடத்திய பிறகு, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளவும் செய்துள்ளார் பிரதமர் ஏஞ்சலா மெர்கல். இதனால் அலுவல் பணிகளை அவர் வீட்டில் இருந்து மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONAVIRUS, ANGELA MERKEL