‘கடந்த ஒரு மாசத்துல நடந்தத வெச்சு பாக்கும்போது.. நான் கேட்டுக்குறதெல்லாம்!”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோட்டை ஏன் தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கேள்விக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளதோடு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும், இதனால் மொத்தத்தில் தமிழகத்தில் 6 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். பின்னர் அடுத்தடுத்து 3 பேர்கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டார்.
இவர்களுள் தாய்லாந்தில் இருந்து 2 பேரும், நியூஸிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவரும், ஸ்பெயினில் இருந்து திரும்பிய ஒருவரும், துபாயில் இருந்து திரும்பிய ஒருவரும், கலிபோர்னியாவில் இருந்து திரும்பிய ஒருவரும் அடங்குவர் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் ஈரோடு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 3 இடங்களை தனிமைப்படுத்துதல் தொடர்பானதில், ஈரோட்டை தனிமைப்படுத்துவதற்கான கேள்வி எழுவதாகவும், அதற்கான காரணம்,
#Update: Many questions asked why Erode is under lockdown, two Thai nationals who were already reported positive are undergoing treatment at Perundurai Medical College. Hope that gives clarity. ( these are NOT new cases). @MoHFW_INDIA #Vijayabaskar #Social_Distancing #TNGovt
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மெடிக்கல் கல்லூரியில்தான், தாய்லாந்தில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது அடுத்த ட்வீட்டில், ‘இதில் இருந்து ஒருவிஷயம் தெளிவாகிறது. கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்து இங்கு வந்தவர்கள்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். அதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருந்தால்
#coronaupdate:The corona positives in TN clearly shows that people with travel history & travelers from abroad are victims of #Covid19. My request to everyone who traveled abroad during the past one month must self quarantine & report to Dr if any symptoms persists. @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 22, 2020
மருத்துவர்களிடம் தெரிவியுங்கள், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்!’ என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் மேலும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளதை அடுத்து, தமிழ்நாட்டில் தற்போது 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.