‘தீயில் சிதைந்த 850 வருட பழமை .. ரூ.780 கோடி தர முன்வந்த மனிதர்’.. நெகிழ்ந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிக அண்மையில் பிரான்ஸ் நாட்டின் 850 ஆண்டுகள் பழமையான கட்டிடமொன்றுக்கு தீப்பிடிக்கத் தொடங்கி, மளமளவென இந்த தீ பரவி, அந்த நாட்டின் மிக முக்கியமான, பலராலும் விரும்பப்படுகின்ற தேவாலய மணி இருக்கும் கோபுரத்துக்கு தீ பரவியது.

‘தீயில் சிதைந்த 850 வருட பழமை .. ரூ.780 கோடி தர முன்வந்த மனிதர்’.. நெகிழ்ந்த மக்கள்!

கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு இந்த கோபுரத்தில் தீப்பற்றியதால்,  சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் இந்த கோபுரத்தில் பற்றி எரிந்த தீயினை அகற்ற, தீவிரமாக போராடி வந்தனர். பின்னர் ஒரு வழியாக 4 மணி நேர நீண்ட முயற்சிக்குப் பிறகு கோபுரம் சாய்ந்துவிடாத அளவிற்கு, அதன் மீது பற்றிய தீயை அணைத்து, கோபுரத்தை காப்பாற்றியுள்ளனர். சுமார் 13 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேவாலயத்திற்கு வந்து போவார்கள், இதேபொல் ஈபிள் கோபுரத்தை காண வரும் மக்களின் எண்ணிக்கையை விட இந்த தேவாலயத்தின் காண வரும் மக்கள் எண்ணிக்கை அதிகமானோர்.

இரண்டாம் உலகப் போரில் எந்த ஒரு சேதத்தையும் இந்த தேவாலயம் எதிர் கொள்ளாத நிலையில், பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை 8 நூற்றாண்டுகளுக்கு மேல், பிரான்ஸ் மக்களின் உணர்வோடு இணைந்து இசைந்து இருந்த இந்த தேவாலயம் சிதையுண்டதை பலரும் தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுதனர். இதற்கு முன்னதாக பிரஞ்ச் புரட்சி நடந்தபோது இந்த தேவாலயத்தில் சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் புராதன சிற்பங்களின் முந்தைய வடிவம் முந்தைய வடிவம்தான் அல்லவா? ஒரு முறை அது தன் ஒரிஜினல் வடிவத்தை இழந்த பிறகு, என்னதான் தனக்கே உரிய கலைவடிவங்களை இழக்காமல் இருந்தாலுங்கூட அதன்மீது உண்டான சிதைவினை, ஏதோ ஒரு இல்லாமையை பலராலும் விரும்பப்படுகின்ற இந்த சின்னத்தின் மீதான போதாமையை உணர்த்திக் கொண்டே இருக்கும் ஒரு மனநிலை இந்த தேவாலயத்தில் தீப்பற்றி எரிந்த பிறகு உருவானதாக பலரும் நெஞ்சம் கலங்கி கூறியுள்ளனர்.

இந்த தேவாலயத்தின் அதி முக்கியமான 16 செப்பு சிலைகள் தீ விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், தேவாலய கட்டடத்தின் கூரை தவிர்த்த மற்ற பகுதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றிப் பேசிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான உணர்வுகளின் இந்த தேவாலயம் ஒன்று என்றும் பிரான்ஸ் நாட்டின் குடிமக்களை போலவே தானும் பிரான்ஸ் நாட்டு மக்களின் ஒரு பாதியான இந்த தேவாலயம் எரிவதை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த புராதன சின்னத்தை, இதன் சேதம் அடைந்த நிலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த தேவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் பலரும் இறங்கியுள்ளனர். அதாவது இதன் சேதங்களை சரி செய்வதற்கான நிதி திரட்டி இதை சரி செய்ய வேண்டும் என்பது அவர்களின் உடனடி விருப்பமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்திய மதிப்பில் சுமார் 780 கோடி ரூபாய் பணத்தை வழங்க உள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். இதனால் பிரான்ஸ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FIREACCIDENT, CHURCH, FRANCE