'புகையிலை புரதத்திலிருந்து' கொரோனாவுக்கு 'மருந்து...' 'பிரிட்டிஷ் அமெரிக்கன்' டொபாக்கோ நிறுவனம் 'அறிவிப்பு...' வாரத்திற்கு '30 லட்சம்' மருந்துகள் தயாரிக்க 'முடிவு...'
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் விஞ்ஞானிகள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தடுப்பூசிக்கான மருந்தை விலங்குகளிடம் சோதனை செய்த பின்னர் மனிதர்களிடம் பரிசோதித்து வருகின்றன. சில தனியார் நிறுவனங்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மருத்துவமனை சோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளதாகவும், எப்போதுவேண்டுமானாலும் மனிதர்களிடம் அதை பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தால் மனிதர்களிடம் சோதனை நடத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனைகள் நிறைவடைந்து வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்தை வாரத்திற்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை தயாரிக்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.