'அதிகரிக்கும் கொரோனா வைரஸ்'... 'ஓரின சேர்க்கையாளர்களுக்கு வந்த சோதனை'... ஐ.நா எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவது, மாற்று பாலுறவு சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 17-ந் தேதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான, சர்வதேச தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் ஆகியோரின் நலனுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இது மாற்று பாலுறவு சமூகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அவர்களுக்கு பாரபட்சம் காட்டுதல், அவர்கள் மீதான தாக்குதல் போன்றவை மிகுந்த கவலை அளிக்கிறது. மேலும் அவர்களுக்கான சுகாதார சேவையும் சரியாக கிடைப்பதில்லை. இது அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.
சமூகத்தில் உரிமையுடனும், சுதந்திரமாகவும், சமமாகவும் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்களையும் கண்ணியமாகவும், சம உரிமையுடனும் நடத்த வேண்டும். அவர்களையும் கொரோனாவில் இருந்து காக்க வேண்டும்'' என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ தெரிவித்துள்ளார்.