இலங்கைத் தாக்குதல்: சுற்றுலா வந்தபோது நிகழ்ந்த சோகம்.. 3 குழந்தைகளை இழந்த பணக்காரர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு  இலங்கை நாட்டுக்கு சுற்றுலாவிற்கு வந்த தொழிலதிபர், தனது 3 குழந்தைகளை இழந்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கைத் தாக்குதல்: சுற்றுலா வந்தபோது நிகழ்ந்த சோகம்.. 3 குழந்தைகளை இழந்த பணக்காரர்!

டென்மார்க் நாட்டின் 46 வயதான தொழிலதிபர் ஆன்டர்ஸ் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன், தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார். போர்ப்ஸ் பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் ஆவார்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவருக்கு சொந்தமாக உள்ளன. இவரின், சொத்து மதிப்பு 50,000 ரூபாய் கோடி. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆன்டர்ஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்தத் தகவலை பாவ்ல்ஸனின் பேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளைப் பலி கொடுத்த ஆன்டர்ஸனுக்கு ஸ்காட்லாந்து நாட்டின் 1 சதவிகித நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் ஆன்டர்ஸனுக்கும், இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000  ஏக்கர் நிலம் உள்ளது. பிரிட்டனில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 

பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்' நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஆஸோஸ், ஸாலான்டோ நிறுவனங்களிலும் ஆன்ட்ரஸனுக்கு குறிப்பிடத்தக்க ஷேர்கள் உள்ளன.

`இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்' என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்டர்ஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன்னர் ஆன்டர்ஸனின் மூத்த மகள், தனது இளைய சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, சின்ன சுற்றுலா என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் கலங்கி நிற்கிறார் ஆன்டர்ஸ்.

SRILANKA, BLASTS, DANISH, BILLIONAIRE