‘ஈஸ்டர் தினத்தன்று ஏன் இலங்கை அரச பிரதிநிதி ஒருத்தரும் சர்ச்சுக்கு போகல?’.. ராஜபக்சே கேள்வி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிக அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து 9 இடங்களில் நிகந்துள்ள தொடர் மனித வெடிகுண்டுகள் எனப்படும் தற்கொலைப்படைத் தாக்குதலால் 300க்கும் மேற்பட்டோர் இறந்ததும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் உலகம் முழுவதுமுள்ள மனிதாய மனங்களை உலுக்கியுள்ளன.

‘ஈஸ்டர் தினத்தன்று ஏன் இலங்கை அரச பிரதிநிதி ஒருத்தரும் சர்ச்சுக்கு போகல?’.. ராஜபக்சே கேள்வி!

முன்பே உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை வந்ததாகவும், ஆனால் அதனை பொருட்படுத்தாத தங்கள் அலட்சியத் தனத்துக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. அதே சமயம் வெடிகுண்டுகளுடன் இலங்கைக்குள் நுழைந்த வாகனங்களை சோதித்து வரும் அந்நாட்டு அரசு இது சம்மந்தமாக 24 பேரை கைது செய்ததோடு, தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மீதும் குற்றம் சாட்டியது.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை தெற்காசிய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதுபற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலிவர் மஹிந்த ராகபக்சே, அத்தனை பெரிய ஈஸ்டர் பண்டிகைக்கு வழக்கமான பாதுகாப்பினை அரசு கொடுத்திருந்தால் கூட இத்தகைய அழிவு நேர்ந்திருக்காதே? என்று கேள்வி எழுப்பியவர், விடுதலைப் புலிகளுடன் சிங்கள ராணுவம் சண்டையிட்டபோதுகூட இத்தகைய அழிவு நேரவில்லை என்று கூறினார்.

மேலும் பேசியவர், இலங்கை அரச பிரதிநிதிகள் ஒருவர் கூட ஏன் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடந்த தேவாலயங்களில் கலந்துகொள்ளவில்லை? உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தும் ஏன் மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

MAHINDARAJABAKSHA