VIDEO: 'பணத்துல என்ன சார் சந்தோஷம் இருக்கு!?'... 'பார்க்க வர்றவங்க ஏதாச்சும் கொடுப்பாங்க!'... 'எனக்கு அதுவே போதும்!'... கோடீஸ்வர வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு... சிங்கத்துடன் கொஞ்சி விளையாடும் இளைஞர்!... பிரம்மிக்கவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆப்பிரிக்காவில் சிங்கங்களுடன் குடித்தனம் நடத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

டீன் ஸ்னெய்டர் என்ற பணக்கார இளைஞர் பல்வேறு தொழில் செய்து வந்தார். அப்போதுதான், ஆப்பிரிக்க சிங்கங்கள் அழியும் நிலையில் இருப்பதை அவர் அறிந்துள்ளார். இதன் விளைவாக, தென் ஆப்பிரிக்காவில் சுமார் 360 ஹெக்டேர் நிலத்தை வாங்கி அதில் சிங்கங்களை வளர்த்து வருகிறார். இதற்காக தனது அனைத்து வேலைகளையும் ராஜினாமா செய்த ஸ்னெய்டர், தற்போது சிங்கங்களுடன் உற்சாகமாக பொழுதைக் கழித்து வருகிறார்.
தனது பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தரும் பணத்தில் வாழ்வதே தனக்குப் போதும் என்று கூறும் அந்த இளைஞர், பூங்காவில் வளர்த்து வரும் சிங்கங்கள் மற்றும் கழுதைப் புலிகளுமே இனி தனது வாழ்க்கை என அதிர வைக்கிறார்.
video courtesy: dailymail uk
pic coutesy: jam press