'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா!?'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா!... நெஞ்சை உலுக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 53 சமூக நலப்பணியாளர்கள் வைரஸ் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சமுதாயத்துக்காக உழைக்கனும்னு நெனச்சது குத்தமா!?'... உதவி செய்யப் போன இடத்தில்... சமூக நலப்பணியாளர்களை கதறவைத்த கொரோனா!... நெஞ்சை உலுக்கும் சோகம்!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையும் அடக்கி ஆண்டு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் உட்பட 101 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர். இதனால், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3,119 ஆனது. அங்கு 40 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதற்கிடையே, சீனாவில் கொரோனா பாதித்த பகுதிகளில் 53 சமூக நலப்பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CHINA, CORONAVIRUS, SOCIALWORK