''புதைக்க இடம் இல்லை" ... 'அறை' முழுவதும் "உடல்கள்" ... நெஞ்சை "உறைய" வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கம் உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் கொரோனா வைரஸ் மூலம் இறந்தவர்களின் சடலங்களை இன்னமும் அப்புறப்படுத்தாததால் அவை  அழுகி நாற்றம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

''புதைக்க இடம் இல்லை" ... 'அறை' முழுவதும் "உடல்கள்" ... நெஞ்சை "உறைய" வைக்கும் சம்பவம்!

சுமார் 90 பேர் வசித்து வந்த முதியோர் காப்பகம் ஒன்றில் முப்பது பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாரிஸ் பகுதியிலுள்ள கல்லறைகளுக்கு பக்கத்திலும் நிறைய உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாத காரணத்தால் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு நாள் கணக்காக கிடப்பில் கிடக்கின்றது.

இதன் காரணமாக காப்பகத்தில் உள்ள உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காப்பகத்தில் அதிக மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அங்கு தொடர்ந்து மரணம் நிகழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்சில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மூன்றிற்கு ஒரு பங்கினர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய இடமில்லாமல் திணறி வரும் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.