'எந்தெந்த' விலங்குகளை 'இனி' இறைச்சிக்காக வளர்க்கலாம்?... 'சீனா' வெளியிட்டுள்ள 'புதிய' வரைவு பட்டியல்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எந்தெந்த விலங்குகளை இனி இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது.

'எந்தெந்த' விலங்குகளை 'இனி' இறைச்சிக்காக வளர்க்கலாம்?... 'சீனா' வெளியிட்டுள்ள 'புதிய' வரைவு பட்டியல்...

சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சீனாவிலுள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என எழுந்துள்ள சந்தேகத்தால் அங்கு எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வேளாண்மை மற்றும் கிராம நல அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், "பன்றி, கோழி, ஆடு, மாடு, மான், தீக்கோழி மற்றும் ஒட்டக இனத்தைச் சேர்ந்த அல்பாகா உள்ளிட்ட 13 விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். அதேவேளையில் நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றையும் வளர்க்கலாம், ஆனால் அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலுக்கு காரணமென சந்தேகிக்கப்படும் எறும்பு தின்னி, வவ்வால் ஆகியவையும், நாய் இனங்களும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.