‘பப்ளிக்' இடத்துல இப்டிலாம் செய்யலாமா?... ‘காதல் ஜோடிகளுக்கு நிகழ்ந்த சோகம்’... அதிரவைத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேசியாவில் பொதுவெளியில் அத்துமீறிய காதல் ஜோடிகளுக்கு, கொடுக்கப்பட்ட தண்டனை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பப்ளிக்' இடத்துல இப்டிலாம் செய்யலாமா?... ‘காதல் ஜோடிகளுக்கு நிகழ்ந்த சோகம்’... அதிரவைத்த தண்டனை!

இந்தோனேசியாவின் பண்டா அசேயில், இஸ்லாமியச் சட்டங்களின் படி பொதுவெளியில் ஆணும், பெண்ணும் காதல் செய்வது, பாலியல் செயல்களில் ஈடுபடுவது கடும் குற்றமாகும். அதன்படி பொதுவெளியில் 3 காதல் ஜோடியினர் பாலியல் செயலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த வியாழனன்று, முகத்தை மறைத்துக் கொண்டு வந்த ஷரியா அதிகாரி ஒருவர், 3 ஆண், 3 பெண்கள் கொண்ட ஜோடிக்கு, தலா 20 முதல் 22 பிரம்படித் தண்டனை,  பொதுமக்கள் முன்னிலையில் கொடுத்தார்.

பொதுவெளியில் காதலித்ததற்கான தண்டனை இது என்று கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்ததாக, அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தண்டனை அனைத்தும் மசூதியின் முன்பாக நிறைவேற்றப்பட்டது. இதனை அங்குவந்த சுற்றுலாப் பயணிகளும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. பொதுவெளியில் பிரம்படி கொடுப்பது கொடூரமான சித்ரவதை என்று பலர் கண்டித்துள்ளனர்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடூடுவும், இந்த முறை ஒழிய வேண்டும் என்று  வலியுறுத்தி வருகிறார். ஆனால் அங்குள்ள உள்ளூர் மக்களிடம் இதற்கு வரவேற்பு உள்ளது. உலகில் அதிகளவில் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், அசே பகுதியில் மட்டும்தான், ஷரியத் இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சூதாட்டம், மதுபோதை, தன்பாலின ஈர்ப்பு, திருமணத்துக்கு முந்தைய உறவு உள்ளிட்ட குற்றங்களுக்கு, சுமத்ரா உள்ளிட்ட பகுதிகளில் கசையடி தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

INDONESIA, LOVERS