ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி..! அரசு மருத்துவர்களுக்கு செக் வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசு மருத்துவர்கள் இனி தனியார் மருத்துவமனைகள் நடத்தக்கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வரின் அடுத்த அதிரடி..! அரசு மருத்துவர்களுக்கு செக் வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..!

ஆந்திர முதல்வராக பதவியேற்றதில் இருந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் நடத்தக்கூடாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளின் மருத்து செலவு ஆயிரம் ரூபாயை தாண்டினால் அதனை அரசு ஏற்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் குடும்பத்துக்கு, நோயாளி குணமடையும் வரை மாதம் 5000 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் அல்லது க்ளினிக் நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ANDHRAPRADESH, GOVT, DOCTORS, JAGANMOHANREDDY, YSJAGAN