"மருந்தெல்லாம் கண்டுபிடிச்சாச்சு..." 45 இளைஞர்களிடம் இன்று தொடங்கி விட்டார்கள்...ஒரு 'வருஷம்' ஆகுமாம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை பரிசோதிக்கும் பணி அமெரிக்காவின் சியாட்டில் நகரின் இன்று தொடங்கியது. இந்த மருந்து பரிசோதனை முடிந்து நடைமுறைக்கு வர ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் வரை ஆகும் என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் நாடுகள் முழுவதும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இரவு, பகலாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸை ஒழிக்க தயாரிக்கப்பட்ட மருந்தை பரிசோதிக்கும் பணி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இன்று தொடங்கியது. வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை நடைபெறுகிறது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் இதற்கான நிதியை வழங்கியுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக ஆரோக்கியமான 45 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட பரிசோதனையில் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுகிறதா? என சோதிக்கப்பட உள்ளது. முழுமையான சோதனைகள் முடிவடைய ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின்போது பரிசோதிக்கப்படும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.