'ஊடக மக்களே, பேட்டி எடுக்காதீங்க' ... 'மைக்' மூலமா கொரோனா பரவுதாம் ... கேரள அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு !
முகப்பு > செய்திகள் > இந்தியாஊடகங்கள் பயன்படுத்தும் மைக் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் பேட்டி எடுக்க கேரளா அரசு தடை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் மூலம் இரண்டு பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் அதிகபட்சமாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள அரசு கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதிலிருந்து மீண்டவர்களை ஊடகங்கள் பேட்டியெடுக்கும் போது மைக் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற நிலையுள்ளதால் ஊடகங்கள் மைக் பயன்படுத்தி பேட்டி எடுப்பதை தவிர்க்குமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.