‘எவரெஸ்ட்’ மலையில் ‘5ஜி’ டவர்.. கொரோனா களேபரத்துக்கு நடுவில் ‘சைலண்டா’ அடுத்தடுத்த வேலையில் இறங்கும் சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திபெத்தில் உள்ள எவரெஸ்ட் மலையில் 5ஜி டவர்களை சீனா நிறுவியுள்ளது.

‘எவரெஸ்ட்’ மலையில் ‘5ஜி’ டவர்.. கொரோனா களேபரத்துக்கு நடுவில் ‘சைலண்டா’ அடுத்தடுத்த வேலையில் இறங்கும் சீனா..!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸால் உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில்  எவரெஸ்ட் சிகரத்தில் 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் உயரத்தில் சீனா 5ஜி டவர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. மேலும் இந்த டவர்களை அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எவெரெஸ்ட் சிகரத்தின் தோற்றத்தை 24 மணிநேரமும் படம் பிடிக்கப்படும் என சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு இந்த காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.