'உத்தரவை மதிக்காத மக்கள்'... 'எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீடு வீடா பேப்பர் போட கூடாது'... ஊரடங்கு தளர்வு வாபஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

'உத்தரவை மதிக்காத மக்கள்'... 'எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீடு வீடா பேப்பர் போட கூடாது'... ஊரடங்கு தளர்வு வாபஸ்!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளான புனே மற்றும் மும்பையை உள்ளடக்கிய பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை வீடு வீடாக வழங்க, மும்பை பெருநகரப் பகுதி மற்றும் புனே நகரில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே ஏப்ரல் 20 ம் தேதி ஏராளமான மக்கள் பயணம் செய்ததைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அரசு கூறி உள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  251 பேர் உயிரிழந்துள்ளனர்.