கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக முட்டி-மோதிக்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸை சீனா தான் பரப்பியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதுகுறித்த உண்மையை வெளிக்கொணர அமெரிக்க உளவுப்பிரிவான சிஐஏ-வையும் அவர் கையில் எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியா குறித்த தகவல்களை மிகவும் உன்னிப்பாக அமெரிக்கா தொடர்ந்து கவனித்து வருகிறது. இதற்கிடையில் கிம்மின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள மருத்துவ குழுவொன்றை சீனா, வட கொரியாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா விவகாரத்தில் ஏற்கனவே முட்டிக்கொண்டு நிற்கும் சீனாவும் ,அமெரிக்காவும் தற்போது வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்த உண்மையை வெளிக்கொணருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கி உள்ளன. இதில் முதலில் எந்த நாடு உண்மையை கண்டறிய போகிறது? என்பதை அறிய ஒட்டுமொத்த உலக நாடுகளும் காத்துக்கொண்டு நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.