வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த சில நாட்களாக கொரோனாவை விட அதிகம் அடிபடுவது வடகொரிய அதிபர் கிம் ஜான் உங்கின் உடல்நிலை குறித்த செய்திகள் தான். அவர் அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!

எனினும் இதுகுறித்து எந்தவொரு தகவலையும் வடகொரிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி அலற விட்டதால் அமெரிக்கா கிம்மின் உடல்நிலை குறித்து அறிய பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் சீனாவும் கிம் உடல்நிலை குறித்து அறிய மருத்துவக்குழுவை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார் என்று அண்டை நாடான தென்கொரியா தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்-னின் வெளியுறவு செயலாளர் சங் இன் மூன் கூறுகையில், ''கிம் வடகொரியாவின் வோன்சானில் இருக்கும் தன்னுடைய கடற்கரை விடுதியில் தங்கி இருக்கிறார். அவர் கடந்த 13-ம் தேதி முதல் அங்கு தங்கியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.

அண்மையில் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று கிம்மிற்கு சொந்தமான ட்ரெயின் கடற்கரை நகரத்தில் இருப்பதாக செய்தி வெளியானது. தற்போது தென் கொரியாவும் அதையே தெரிவித்து இருப்பதால் கிம் தற்போது உயிருடன் இருப்பது உறுதியாகி இருக்கிறது.