‘பனி உருக உருக வெளிவரும் மனித உடல்கள்..’ என்ன நடக்கிறது எவரெஸ்ட்டில்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எவரெஸ்ட் மலையில் பனி உருகுவதால் சிகரத்தை அடைய முயற்சித்து பல ஆண்டுகளாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றன.

‘பனி உருக உருக வெளிவரும் மனித உடல்கள்..’ என்ன நடக்கிறது எவரெஸ்ட்டில்..?

பனியில் உறைந்துபோன உடல் சுமார் 140 கிலோ வரை எடையுடன் இருக்குமென கூறப்படுகிறது. அங்குள்ள பருவ நிலையில் அந்த உடல்களை சுமந்து எடுத்து வருவது மிகவும் கடினமாகும். இருப்பினும் எப்படியாவது உடல்களை மீட்டுத் தர வேண்டுமென இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 2008ஆம் ஆண்டு முதல் முறை ஏறியபோது 3 உடல்களைப் பார்த்ததாகக் கூறுகிறார் கெல்ஜே ஷெர்பா. இதுவரை 6 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ள இவர் அந்த உடல்களின் எண்ணிக்கை தற்போது இருமடங்கு ஆகியுள்ளதாகக் கூறுகிறார்.

எவரெஸ்ட் உச்சியை அடைய முயற்சித்து பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் தற்போது வெளிவர புவி வெப்பமடைதலே காரணம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால் பனி உருகும் போது உடல்கள் வெளியே தெரிகின்றன. இந்த ஆண்டு காலநிலையால் ஒரே நேரத்தில் பலர் மலையேறினர். இதனால் உச்சியை அடைய முடியாமல் மலையேறியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகியது. கடந்த ஆண்டுகளை விட அதிகமாக இந்த ஆண்டு இதுவரை 11 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

EVEREST2019