‘6 வருஷத்துக்கு முன்னாடி சொன்னத இப்போ சொல்லி இருக்கலாம் பாஸ்’.. ஆம்லா தலையை பதம்பாத்த இங்கிலாந்து வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஆம்லாவின் தலையில் இங்கிலாந்து வீரர் வீசிய பந்து பலமாக தாக்கியது.

‘6 வருஷத்துக்கு முன்னாடி சொன்னத இப்போ சொல்லி இருக்கலாம் பாஸ்’.. ஆம்லா தலையை பதம்பாத்த இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது. ஐபில் தொடரில் ஹைதராபாத் அணியின் சார்பாக அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்ட்டோ உலகக்கோப்பையில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 311 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஆம்லா களமிறங்கினர். அப்போது போட்டியின் 3 -வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசினார். இதன் 5 -வது பந்தை ஆம்லா எதிர்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்லாவின் தலையில் பந்து பலமாக தாக்கியது. இதனால் பாதியிலேயே ஆட்டத்திலிருந்து ஆம்லா வெளியேறினார். கடந்த 2013 -ம் ஆண்டு ஆர்ச்சர், தனது பந்துவீச்சைக் குறித்து ட்வீட் செய்ததை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ICCWORLDCUP2019, JOFRA ARCHER, AMLA, ENGVSA, INJURY